அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடும் விமர்சனம்

by Staff / 08-08-2023 02:00:24pm
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடும் விமர்சனம்

கடலூர் மாவட்டத்தில் நெற்பயிர்களின் நடுவே வயல்வெளியில் கால்வாய் தோண்டும் பணிகள் கடந்த 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “ஓரிடத்தில், மண்ணையும் மக்களையும் காக்க எந்த எல்லைக்கும் செல்வோம் எனவும், இன்னொரு இடத்தில், நாங்கள் டெல்லி அளவில் மட்டுமே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறோம். தமிழ்நாட்டில் இல்லை என்றும் நாடகமாடுவது என்பதைக் கைவந்த கலையாக செய்து வருகிறார் அன்புமணி ராமதாஸ். என்.எல்.சி விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடமாட்டோம் என்று ஒன்றிய பாஜக அமைச்சர், அறிவித்த பிறகும், பெட்டிப் பாம்பு போல் அடங்கி கிடப்பது ஏன்?” என கடும் விமர்சனம் செய்துள்ளார்.

 

Tags :

Share via

More stories