செந்தில் பாலாஜி வழக்கை முடிக்க ஆணை

by Staff / 08-08-2023 02:15:03pm
செந்தில் பாலாஜி வழக்கை முடிக்க ஆணை

செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கை செப்.30க்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப்.30க்குள் முடிக்காவிட்டால் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், போலீஸ் நினைத்தால் 24 மணி நேரத்தில் முடிப்பீர்கள். இல்லையெனில் 24 வருடங்கள் இழுத்தடிப்பீர்கள். 6 மாத அவகாசம் தேவை என்ற தமிழக குற்றப்பிரிவு காவல்துறையின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. தமிழக டிஜிபி, உள்துறை செயலாளர் ஆஜராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

 

Tags :

Share via

More stories