49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் களத்தில் இறங்கினர். முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது .களத்தில் இறங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அட்டகாசமான துவக்கத்துடன் நன்களை குவிக்க ஆரம்பித்து இந்த போட்டி சென்னை அணிக்கே செல்லும் என்கிற சூழ்நிலை உருவாக்கியது. 20 ஓவர் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது. 236 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களத்தில் இறங்கிய கொல்கத்தா அணி ஆடியது.. 20 ஓவரின் ஆறு விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது கொல்கத்தா அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

Tags :