வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களின் மனைவிகளை குறிவைத்து பணம் பறித்த 2 பேர் கைது

by Editor / 16-01-2022 11:04:45pm
வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களின் மனைவிகளை குறிவைத்து  பணம் பறித்த 2 பேர் கைது


 கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கள்ளம்பலம் பள்ளிகல் பகுதியைச் சேர்ந்தவர் ஜீமா. இவரது கணவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் நிலையில் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.இதேபோல கேரளா மாநிலம் இளமாடு பகுதியைச் சேர்ந்த நாஸியா என்பவரது கணவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் நிலையில் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.இந்த நிலையில் இரண்டு பெண்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்ற குழந்தைகளை விட்டுவிட்டு  திடீரென மாயமாகினர். குழந்தைகள் வீட்டில் இருந்த நிலையில் தாயை காணாதது குறித்து உறவினர்கள் இருவரது கணவர்களுக்கும் தகவல் அளித்தனர். தொடர்ந்து பெண்கள் மாயமானது குறித்து பள்ளிகல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான இரு பெண்களையும் தீவிரமாக தேடி வந்தனர் . அவர்களுக்கு செல்போன் மற்றும் வாட்ஸ்ஆப் உரையாடல்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் உதவியோடு விசாரணை மேற்கொண்டனர்.போலீசார் விசாரணையில் மாயமான இரு பெண்களும் கேரள மாநிலம் வர்க்கலா பகுதியைச் சேர்ந்த சைன் மற்றும் கொல்லம் கருநாகப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ரியாஸ் ஆகிய இருவருடன் ஓடிப் போனது தெரியவந்தது.  அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியாத நிலையில் செல்போன் சிக்னல் மூலம் அவர்கள் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து குற்றாலம் விரைந்து சென்ற கேரளா போலீசார் ஜீமா, நாசியா, சைன், ரியாஸ் ஆகியோரை கைது செய்து திருவனந்தபுரம் அழைத்து சென்றனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட ரியாஸ் மற்றும் சைன் ஆகியோர் திடுக்கிடும் தகவல்களை  விசாரணையில் தெரிவித்தனர். வெளிநாடுகளில் பணிபுரியும் நபர்களின் மனைவிகளை குறிவைத்து அவர்களுடன் இருவரும் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உள்ளனர். மேலும் கணவர்கள் வெளிநாட்டில் இருப்பதை பயன்படுத்தி அவர்களை மயக்கி தனியே அழைத்துச் சென்று அவர்களுடன் உல்லாசமாக இருந்தனர். மேலும் தங்களது வலையில் சிக்கும் பெண்களிடம் பணம் மற்றும் நகைகளை பறிப்பது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

 

Tags :

Share via