மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவர் தற்கொலை

by Staff / 19-10-2023 05:13:30pm
மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவர் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலத்தில் மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து எம்பிபிஎஸ் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தகவல் தெரிவித்தனர். துங்கர்பூர் மருத்துவக் கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வரும் சுதன்ஷி சிங் (22) என்பவர் விடுதியில் தனியாக தங்கி இருந்த நிலையில் தற்கொலை செய்துள்ளார். மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo