பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அமைச்சர் பதில்
முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட காலை உணவு திட்டத்திற்கான நவீன சமையல் கூடம் திருச்சி மரக் கடையை அடுத்த சையது முத்துஷா மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சமையல் கூடத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக 81 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 5000-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் திருச்சி மாவட்டத்தில் பயன்பெறுவார்கள். தொடர்ந்து இத்திட்டத்தை கண்காணிக்க வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
அவரின் கனவுத் திட்டமான இத்திட்டத்தை தொடர்ந்து வெற்றிகரமாக செயல்படுத்துவோம். அரசு உதவி பெறும் பள்ளியில் இத்திட்டத்தை விரிவுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்.புதுக்கோட்டையில் ஆசிரியை பள்ளி வகுப்பறையில் தாக்கியவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். 8.15 மணிக்குள் காலை உணவு மாணவர்களுக்கு சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுப்போம் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
Tags :