எம்.எஸ். சுவாமிநாதன் குழு கொடுத்த அறிக்கையின்படி, விளைபொருள்களுக்குஉரிய விலையை, அரசு உறுதி செய்ய வேண்டும். வைகோ

by Editor / 28-11-2021 08:32:30pm
எம்.எஸ். சுவாமிநாதன் குழு கொடுத்த அறிக்கையின்படி, விளைபொருள்களுக்குஉரிய விலையை, அரசு உறுதி செய்ய வேண்டும்.  வைகோ


நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர், இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார். அமைச்சர்கள் பிரகாலாத் ஜோஷி, பியுஷ் கோயல் முன்னிலை வகித்தனர். அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டார். அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:-

இந்தியா விடுதலை பெற்ற பிறகு, இதுவரை காணாத அளவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் உயிர் இழந்த 750 விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகின்றேன். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் தங்கள் உடைமைகளை அவர்கள் இழந்து இருக்கின்றார்கள். காஷ்மீரில் இருநது கன்னியாகுமரி வரை மக்கள், போராட்டம் நடத்திய விவசாயிகளை ஆதரித்தனர்.

எனவே, இந்த மூன்று வேளாண் பகைச் சட்டங்களையும் இந்திய அரசு திரும்பப் பெறும் என்று, தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அண்மையில் உறுதி கூறினார். அதன்படி, நடைபெற இருக்கின்ற இந்தக் குளிர்காலக் கூட்டத் தொடரில் முதுல் நாளே வர வேண்டிய மசோதா, பத்தாவது இடத்தில் இடம் பெற்று இருக்கின்றது,

எம்.எஸ். சுவாமிநாதன் குழு கொடுத்த அறிக்கையின்படி, விளைபொருள்களுக்கு விலை உரிய விலையை, அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் வைகோ வலியுறுத்திபேசினார்.

 

Tags :

Share via

More stories