லாரி மீது காா் மோதி விபத்து: பெண் பலி, 4 போ் படுகாயம்

by Staff / 04-01-2023 02:48:13pm
லாரி மீது காா் மோதி விபத்து: பெண் பலி, 4 போ் படுகாயம்

மதுரை அருகே உள்ள திருப்பாலை பகுதியைச் சோ்ந்தவா் வைத்தியலிங்கம் (60), இவரது மனைவி ஜெயந்தி (55), இவா்களது மகள்கள் சரண்யா (36), செண்பகம் (32). இவா்கள் அனைவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனா். தற்போது உறவினா்களை பாா்ப்பதற்காக இந்தியா வந்துள்ள இவா்கள், மதுரை பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்து விட்டு  வாடகைக் காரில் கா்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள மற்றொரு உறவினா் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனா்.

தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள செடிகளுக்கு தண்ணீா் பாய்ச்சிக் கொண்டிருந்த தண்ணீா் லாரியின் பின்னால் காா் மோதியது. இதில் காரின் முன்பக்கம் முழுவதுமாக நொறுங்கியது. இதில், ஜெயந்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சரண்யா, வைத்தியலிங்கம், செண்பகம் ஆகியோா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும், திண்டிவனத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் செல்வக்குமாா் (28) நாமக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்து காரணமாக கரூா் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
 

 

Tags :

Share via

More stories

Logo