இந்தியை ஏற்க மாட்டோம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழா இன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ.வில் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.இந்த விழாவில் பேசிய துணை முதலமைச்சர், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சாதாரண, சாமானியன் ஸ்டாலினையும் இந்த இடத்தில் அமர வைத்தமைக்கு கோடிக்கணக்கான உடன்பிறப்புகளே காரணம். நான் நினைத்துப் பார்க்காத இடம், உயரம் இங்கு அழைத்து வந்தது உடன்பிறப்புகள்.பிறந்தது கோபாலபுரம் என்றாலும் என்னை வளர்த்தது தமிழ்நாடு. நாளும் பொழுதும் ஓடி ஓடி தமிழ்நாடு முழுக்க கருப்பு சிவப்பு கொடியேற்றியதால் தான் கோட்டையில் கொடியேற்ற முடிந்தது. கலைஞரைப் போல் நானும் உழைக்கிறேன்; முதலமைச்சரான பின்பும் உழைக்கிறேன். உழைத்துக் கொண்டேயிருக்கும் போது பிறந்தநாள் என்பது ஒரு வேகத்தடை ஒரு நிமிட இளைப்பாறுதல்.என்று தெரிவித்தார்.மேலும் "நீங்கள் எவ்வளவு மிரட்டினாலும் இந்தியை ஏற்க மாட்டோம்" எனக் கூறினார். 2026 வெற்றிக்கான தொடக்க விழா இது என்றும் தெரிவித்தார்.
Tags :