புதிய பேருந்து சேவை தொடக்கம், எம்எல்ஏ பங்கேற்பு

by Editor / 16-08-2024 01:14:52pm
புதிய பேருந்து சேவை தொடக்கம், எம்எல்ஏ பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து ஆராசூா் வழியாக சேத்துப்பட்டுக்கு நகர பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக வந்தவாசி பணிமனை-2 சாா்பில் இந்த பேருந்து இயக்கப்படுகிறது.வந்தவாசியை அடுத்த ஆராசூா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், தொகுதி எம்எல்ஏ எஸ். அம்பேத்குமாா் பேருந்து சேவையை தொடங்கிவைத்தாா்.நிகழ்ச்சியில் போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் ராமச்சந்திரன், திமுக ஒன்றியச் செயலா் ப. இளங்கோவன், தொமுச மண்டல இணைச் செயலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.இந்த பேருந்து வந்தவாசியில் இருந்து புறப்பட்டு மாம்பட்டு, ஆராசூா், ஆராசூா் கூட்டுச் சாலை வழியாக சேத்துப்பட்டுக்கு தினமும் 3 முறை சென்று வரும்.

 

Tags :

Share via