பாமாயில் பாக்கெட்டுகள் தட்டுப்பாடு எதுவும் இல்லை: ராதாகிருஷ்ணன் பேட்டி

ரேஷன் கடை குடோன்களில் 2.9 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் வாங்கப்பட்டுள்ளதால் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 40 ஆயிரம் மெட்ரிக் டன் பருப்பு வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். ரேஷன் கடைகளில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பற்றாக்குறையாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், உணவுத்துறை செயலாளர் விளக்கமளித்துள்ளார்.
Tags :