சாதியைத் திணிக்கும் சர்வாதிகார அமைப்பாக சீமான் - நாம் தமிழரில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி

சாதியைத் திணிக்கும் சர்வாதிகார அமைப்பாக சீமான் கொண்டுபோகிறார்" - நாம் தமிழரில் இருந்து விலகிய
நாம் தமிழர் கட்சி மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஞானசேகரன் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியுள்ளார். மேலும், சங்பரிவார் அமைப்புகளோடு கைகோர்த்துக்கொண்டு சீமான் செயல்படுவதாக ஞானசேகரன் குற்றம் சாட்டியிருக்கிறார்.இது தொடர்பாக மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஞானசேகரன் விடுத்த அறிக்கையில், "உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல், நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து, நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. அப்படி உருவாக்கினாலும், அது உடைந்து சிதறி, உருப்படாமல் போகும். அம்பேத்கர் தெரிவித்த இந்தக் கருத்து, சமூக அமைப்புக்கு மட்டுமல்ல, நாம் தமிழர் கட்சிக்கும் பொருந்தும். உலகெங்கும் 12 கோடி தமிழ் மக்கள் இருந்தாலும், ஈழத் தாயகத்தில் சிங்கள பௌத்தப் பேரினவாதத்தால், தமிழ் மொழியைப் பேசுகிறார்கள் என்ற ஒற்றைக் காரணத்திற்காக, நமது மக்கள் கொன்றொழிக்கப்படும்போது அதைத் தடுக்க, தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில், ஒரு பெரும் புரட்சி ஈழத்தில் நடந்த போது, உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து, நமது மக்களை இனப்படுகொலை செய்தனர்.
Tags :