மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுகவின் முக்கிய புள்ளிகள்.!!

by Editor / 20-10-2021 10:51:07am
மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுகவின் முக்கிய புள்ளிகள்.!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் க.ராமசாமி, மாவட்ட துணைச்செயலாளர் கா.சிவகுமார், மாவட்ட பொருளாளர் சாமி.சுரேஷ், மாவட்ட மாணவர் அணி துணைச்செயலாளர் ஆர்.எம்.பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி ஆ.நேரு மற்றும் அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் திருமயம் இரா.குமார், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச்செயலாளர் எம்.முத்துராமன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்அதுபோது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் எஸ்.ரகுபதி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், திருமயம் தெற்கு ஒன்றியக் கழகப் பொறுப்பாளர் அழகு சிதம்பரம் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Tags :

Share via