அதிமுக மாநாட்டில் 2 பேர் பலி
மதுரையில் அதிமுக சார்பில் நேற்று (ஆகஸ்ட் 20) பிரம்மாண்ட மாநாடு நடைபெறுகிறது. அதிமுக மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான கட்சி தொண்டர்கள் நான்கு திசைகளிலும் இருந்தும் வந்து மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்நிலையில், அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பொள்ளாச்சி பெரிய நகமத்தை சேர்ந்த பழனிசாமி, செஞ்சி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பொன்னுச்சாமி உயிரிழந்துள்ளனர். மேலும், இவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டபொது, நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :
















.jpg)


