பீகாரிடம் இருந்து கத்துக்கோங்க - தமிழக அரசுக்கு ராமதாஸ்

by Staff / 27-05-2024 04:45:12pm
பீகாரிடம் இருந்து கத்துக்கோங்க - தமிழக அரசுக்கு ராமதாஸ்

மதுவிலக்கு கோரிக்கை எழும்போதெல்லாம் கள்ளச்சாராயம் பெருகிவிடும், அரசின் வருவாய் குறைந்து விடும் என்று தமிழக ஆட்சியாளர்களால் பூச்சாண்டி காட்டப்படுகிறது. ஆனால் பீகாரில் கள்ளச்சாராயம் பெருகவில்லை, அரசின் வருமானமும் குறையவில்லை என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உணர வேண்டும். பீகாரில் மதுவிலக்கால் அமைதி, மன நிம்மதி, மது சார்ந்த நோய்களில் இருந்து மக்கள் விடுபட்டுள்ளனர். எனவே பீகாரிடம் இருந்து தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo