வருகிற 15-ந்தேதி அண்ணா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துகிறார்

by Editor / 11-09-2022 03:30:06pm
வருகிற 15-ந்தேதி அண்ணா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துகிறார்

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், சென்னை அண்ணாசாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா உருவ சிலைக்கு, அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.

நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர்களும், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் கழக நிர்வாகிகளும் கழக உடன் பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo