மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக மக்கள் வாக்களிக்க தயராக உள்ளனர்

by Admin / 27-01-2024 02:30:28pm
 மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக மக்கள் வாக்களிக்க தயராக உள்ளனர்

திமுக ஆட்சியின் அவலம் காரணமாக மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக மக்கள் வாக்களிக்க தயராக உள்ளனர்  என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள லாயல்மில் காலனியில் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் மொழிப்பேர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் எம்ஜிஆர் இளைஞர் அணி மேற்கு ஒன்றிய செயலாளர் அம்பிகை பாலன் தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முத்துக்கருப்பன் ஆகியோர் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகள் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். 

இதனைத் தொடர்ந்து மாற்றுக் கட்சியில் இருந்து பிரபாவதி என்ற பெண் அதிமுக கட்சியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேசுகையில்அதிமுக ஆட்சி கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிச்சாமி நல்ல ஆட்சி தந்தார். நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்பது போல இன்றைக்கு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் ஊரல்லாம் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு தான். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வந்தால் தான் நாடு நன்றாக இருக்கும் என்று மக்கள் பேசுகின்றனர். குடிமரமாத்து பணிகள், கொரோனா காலத்தில் கோழி தனது குஞ்சுகளை பாதுகாப்பது போல சிறப்பாக பணியாற்றி மக்களின் உயிர்களை காத்த காவல்காரர் எடப்பாடி பழனிச்சாமி.திமுக ஆட்சியின் அவலம் காரணமாக மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக மக்கள் வாக்களிக்க தயராக உள்ளன

ர்.நீட் தேர்வு விலக்கு, நகைக்கடன் தள்ளுபடி என திமுக கொடுத்து தேர்தல் வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை,மது விலக்கு அமுல்படுத்தப்படும் என்று பேசிய கனிமொழியிடம் மக்கள் கேட்க வேண்டும், அனைத்து இடங்களில் மது விற்பனை நடைபெறுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் உள்ளது

.கடந்த 10 ஆண்டு பாஜக ஆட்சியில் தமிழக உரிமைக்காக எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், கச்சதீவு, காவிரி பிரச்சினை மத்தியரசு தீர்க்கவில்லை, முல்லை பெரியாறு பிரச்சினைக்கு மத்தியரசு உதவ வில்லை, நீட் தேர்வு விலக்கு தரவில்லை.எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டி 5வருடமாகிவிட்டது. ஆனால் இன்னும் மருத்துவமனை வரவில்லை. தேசிய கட்சிகளினால் தமிழகத்திற்கு எவ்வித பயனும் இல்லை,

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 39 இடங்களில் வெற்றி பெறும் என்றும், தேசிய கட்சிகளினால் மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படுகிறது.தூத்துக்குடி, சென்னையில் தொடர்மழையினால் பாதிக்கப்பட்ட பாதிப்புகளில் இன்னும் மீளவில்லை. இதனால் திமுகவினை பார்த்து மக்கள் துப்புகின்ற நிலை உள்ளதாக தெரிவித்தனர்

.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முத்துக்கருப்பன் பேசுகையில் 2015ல் சென்னையில் மழை வெள்ளம் வந்த போது அதிமுக அரசும், அதிமுக நிர்வாகிகள் மக்களுக்கு உதவினர். ஆனால் இன்றைக்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை, உதவ வேண்டும் என்ற எண்ணம் திமுகவிற்கு இல்லை, திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டில் வேலை பார்த்த பட்டியல் இன பெண்ணை இன்று துன்புறுத்தி, சித்தரவதை செய்துள்ளனர்.

புரோட்டா கடையில் சாப்பிட்டு காசு தரமால் திமுகவினர் தகராறு செய்கின்றனர். தினமும் கொலை, கொள்ளை தான். தூத்துக்குடியில் மழை நீர் இன்றும் தேங்கியுள்ளது. இருக்கிற அதிகாரிகள் நல்ல அதிகாரிகள் தான். ஆனால் இன்றைக்குள்ள ஆட்சியாளர்கள் சரியாக பயன்படுத்திவில்லை,பெயரளவிற்கு தான் முதல்வர் மு.கஸ்டாலின், உதயநிதிஸ்டாலினும், சபரீசனும் தான் ஆட்சி செய்கின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டிற்கு ரூ1000 கொடுத்து வாக்கினை பெற திமுக முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார்.

 

 மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக மக்கள் வாக்களிக்க தயராக உள்ளனர்
 

Tags :

Share via