தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் கூட்டமைப்பின்-  உண்ணாவிரதப் போராட்டம்*. 

by Admin / 27-01-2024 02:20:45pm
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் கூட்டமைப்பின்-   உண்ணாவிரதப் போராட்டம்*. 

. 60 ஆண்டு கால தொடக்கக் கல்வித்துறையில் நடைமுறையில் இருந்து வந்த ஒன்றிய முன்னுரிமையினை எவ்வித முன் ஆலோசனை இன்றி மாநில முன்னுரிமையாக மாற்றியமைத்ததோடு 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோரின் பதவி உயர்வு வாய்ப்பினை முற்றிலும் பறிக்கும் வகையிலும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் பெண் ஆசிரியர்களுக்கு கடும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 243 -ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். .

இந்த அரசாணை ஆசிரியர்கள் மத்தியில் அரசுக்கு எதிரான மிகுந்த கொந்தளிப்பான  மனநிலையினை ஏற்படுத்தி உள்ளதை பள்ளி கல்வித்துறை அமைச்சர், பள்ளி கல்வித்துறை உயர் அலுவலர்களும், கவனத்தில் கொள்ள வேண்டியும்.30 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் 13- 10- 2023 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவித்த நிலையில் டிட்டோ ஜாக் உயர்மட்ட குழு உறுப்பினர்களை அழைத்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை உயர் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொண்ட 12 அம்ச கோரிக்கைகள் மீது மூன்று மாத காலமாகியும் எவ்வித ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட ஆணைகளை உடனடியாக வெளியிட வேண்டியும். 

இவை தவிர மேலும் 5 கோரிக்கைகளை முன் வைத்து திண்டுக்கல் கல்லறைத் தோட்டம் முன்பு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில்  மாநில பொதுச் செயலாளர் வின்சென்ட் பால்ராஜ் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்..

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பிரபாகரன் .ராஜேந்திரன் மாவட்டத் தலைவர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,சண்முகம் மாவட்ட தலைவர் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிஆல்பர்ட் டென்னிஸ் மாவட்ட தலைவர் தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,ஆர்தர் மாவட்ட தலைவர் தமிழக ஆசிரியர் கூட்டணி,கிருஷ்ணமூர்த்தி மாவட்ட தலைவர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.ஆகியோர் தலைமையிலும் .      .உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில்    கணேசன் துணை பொதுச்செயலாளர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அவர்கள்  சிறப்புரையாற்றி, நன்றியுறை, கூறி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

 

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் கூட்டமைப்பின்-   உண்ணாவிரதப் போராட்டம்*. 
 

Tags :

Share via