ராகுல் காந்தியால் கிடைத்த வெற்றி - சித்தராமையா
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. முதல்வர் பதவி சித்தராமையாவுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர், “நமது தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்துடன் கர்நாடக தேர்தல் பிரசாரம் தொடங்கியது. இந்த பயணம் கர்நாடகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நமது தொழிலாளர்கள் மத்தியில் ஒரு புதிய உற்சாகம் உருவானது. இந்த தேர்தலில் பெற்றுள்ள வெற்றிக்கான பெருமை அவரையே சாரும்” என தெரிவித்துள்ளார்.
Tags :