தந்தையை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த மனைவி மகன் கைது

நாட்டையே உலுக்கிய இளம்பெண் ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கைப் போன்றே, டெல்லியில் மீண்டும் ஒரு படுகொலை நடந்துள்ளது. போலீசார் இன்று ஒரு பெண் மற்றும் அவரது மகனைக் கைது செய்தனர். கைதான நபர் தனது தாயின் உதவியுடன் தந்தையைக் கொன்று சடலத்தை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தலைநகர் திரிலோக்புரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உடல் உறுப்புகள் பாண்டவ் நகர் மற்றும் கிழக்கு டெல்லியின் வெவ்வேறு பகுதிகளில் வீசப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.சந்த் திரையரங்கம் முன்பு நள்ளிரவுக்குப் பிறகு போலீசார், தாயும், மகனையும் கைது செய்தனர். மேலும், துண்டு துண்டாக்கப்பட்டவரின் சடலத்தை கொட்டிச் செல்லும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :