நாம் தமிழர் கட்சி போல் தனித்து போட்டியிட தயாரா சீமான் கேள்வி

by Staff / 28-11-2022 03:25:37pm
 நாம் தமிழர் கட்சி போல்  தனித்து போட்டியிட தயாரா சீமான் கேள்வி

கடந்த 2017ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணக்காடு பகுதியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசினார். இதுதொடர்பாக அவர் மீது அஸ்தம்பட்டி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் சீமானுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

தொடர்ந்து 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு முடியும் நிலையில் இன்று, சீமான் சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்க்கு வருகை தந்து அரசியல் நீதிபதி முன் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'ஆறு தமிழர்கள் விடுதலையை எதிர்த்து பாஜக அரசு மேல்முறையீடு அதை எதிர்த்து நாங்களும் சட்டப்போராட்டம் செய்வோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு - முன்பை விட போதைப்பொருள்கள் அதிகரித்து விட்டது பட்டப்பகலில் கொலை, கொள்ளை நடக்கிறது. தமிழகம் தற்போது போதை தலைவிரித்தாடும் தலைநகரமாக மாறிவருகிறது. எங்குப்பார்த்தாலும் போதைப்பொருள்களின் ஊடுருவல் அதிகமாக இருக்கிறது.

காசி தமிழ்சங்கமம் - தமிழ் மொழியை ஆட்சி மொழியாக பாஜக அரசு அங்கீகரிக்குமா?, நாடாளுமன்றத்தில் தமிழில் பேச உரிமை இருக்கிறதா?, நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை ஏற்று கொள்வார்களா ? கோவில்களில் தமிழ் வழிபாடு இருக்கிறதா..

பாஜக ஆட்சியில் எதுவும் சரியாக நடக்கவில்லை, எல்லாம் தனியாருக்கு தாரை வார்த்து வருகின்றனர். 2024 மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி போல் பாஜக தனித்து போட்டியிட தயாரா' என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், வாக்கு வங்கிக்காக காங்கிரஸ் கட்சி பயங்கரவாதிகளை ஆதரிப்பதாக குஜராத்தில் பிரதமர் மோடி பேசியது குறித்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், 'மொத்த பயங்கரவாதியும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக கட்சியில் தான் இருக்கிறார்கள். பாஜகவை காங்கிரஸ் ஒன்றும் ஆதரிக்கவில்லையே' என்றார்.

 

Tags :

Share via