ஆட்டோ டிரைவருக்கு ரூ.10 கோடி ஜாக்பாட்

by Staff / 29-03-2024 12:55:48pm
ஆட்டோ டிரைவருக்கு ரூ.10 கோடி ஜாக்பாட்

கேரள ஆட்டோ டிரைவருக்கு லாட்டரியில் ரூ.10 கோடி பரிசுத் தொகை விழுந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கேரள அரசின் கோடைக்கால பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ.10 கோடி அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான குலுக்கலில் 308797 என்ற எண் கொண்ட லாட்டரிக்கு முதல் பரிசு கிடைத்தது. அந்த லாட்டரியை கண்ணூர் மாவட்டம் கர்திகாபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நசீர் வாங்கியது தெரிய வந்துள்ளது. குலுக்கல் நடைபெறும் சில மணி நேரங்களுக்கு முன்னர் தான் அவர் அந்த லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.

 

Tags :

Share via
Logo