பாமக இணைந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் விசிக தலைவர் திருமாவளவன்

by Editor / 18-06-2025 01:28:52pm
பாமக இணைந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் விசிக தலைவர் திருமாவளவன்

திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "பாமகவுடன் உறவை முறித்துக்கொள்வது என்பது நாங்கள் ஆழமாக சிந்தித்து எடுத்த முடிவு. அவர்கள் தலித்துகளுக்கு எதிரான வெறுப்பு அரசியலை கையில் எடுத்துள்ளார்கள். நாங்கள் திமுக கூட்டணியில் இல்லை என்றாலும், தனித்து போட்டியிட்டு தேர்தலை எதிர்கொள்வோம். எங்களுக்கு கொள்கைதான் முக்கியம்" என்றார்.

 

Tags :

Share via