ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்த நபர் தற்கொலை

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கண்ணன் நகர் பகுதியில் வசித்து வந்தவர் சம்பத்குமார், எலக்ட்ரானிக் கடை ஒன்றில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்த இவர், தனது சேமிப்பில் இருந்த 15 லட்சம் ரூபாய் பணத்தை குடும்பத்தாருக்கு தெரியாமல் ஆன்லைன் மூலம் ஷேர் டிரேடிங்கில் முதலீடு செய்திருந்தார், ஆனால் முதலீடு செய்த பணத்தில் இருந்து சம்பத் குமாருக்கு முறையாக லாபம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது, 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்த சம்பத்குமார் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்ததனால் குடும்பத்தாரிடம் சொல்லாமல் பரிதவித்து வந்துள்ளார், இந்த நிலையில், விபரீத முடிவு எடுத்த சம்பத்குமார் வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார், அவருக்கு அதிகளவிலான வாந்தி, மயக்கம் ஏற்பட்ட பின், அவரது மனைவியிடம் தான் பூச்சி மருந்து குடித்ததாக தெரிவித்துள்ளார்
இதனை தொடர்ந்து சம்பத்குமாரை அவரது மனைவி மற்றும் குடும்பத்தார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சம்பத்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :