ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை.. அதிர்ச்சி பின்னணி

திருப்பத்தூர் மாவட்டம் அருகே ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழ் குறும்பர் தெரு பகுதியில், இந்த சம்பவம் நடந்த நிலையில், ரயில்வே போலீசார் அங்கு சென்று, சடலங்களை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது, அந்த தம்பதி தங்களது 17 வயதே ஆன மகளுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளனர். இதனால் அவர்கள் மீது குழந்தை திருமண வழக்கு பதியப்பட்டது. இதன் காரணமாக தம்பதி இந்த விபரீத முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
Tags :