வி. ஏ. ஓவுக்கு மிரட்டல் விடுத்த 7 பேர் மீது வழக்கு

by Staff / 22-03-2023 02:50:25pm
வி. ஏ. ஓவுக்கு மிரட்டல் விடுத்த 7 பேர் மீது வழக்கு

மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடி அருகே மேலநேசனேரி கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் செல்வம்(54) என்பவர் அந்தப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 50 சென்ட் அரசு நிலத்தை தாசில்தார் உத்தரவின் பேரில் மீட்டு அளந்து வேலி போடும் நடவடிக்கை எடுத்த போது நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த கும்பலுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.இதனால் அந்த பகுதியை சேர்ந்த ரத்தினசாமி, வெள்ளைச்சாமி, துரைச்சாமி, பெரிய கருப்பன், சின்னச்சாமி, சேது நாராயணன், தன்னாசி ஆகிய 7 பேரும் கிராம நிர்வாக அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்து கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் செல்வம்,கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories