மான் இறைச்சி சமைத்த 4 பேர் கைது - ராமநாதபுரத்தில் பரபரப்பு.

இராமநாதபுரம் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் தலைமையில் வணப்பணியாளர்கள் குழு புல்லங்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட மஞ்சலோடை மரப்பாலம் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 (திருத்தப்பட்டது 2022)-ன் படி அட்டவணைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்ட புள்ளிமானை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்துக் கொண்டிருந்தபோது, அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சுமார் 1 ½ வயதுள்ள பெண் புள்ளிமானை சுருக்கு கம்பி மூலம் வேட்டையாடி கொன்று அருகில் உள்ள செங்கல் சூளையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மானின் தோல், மஞ்சள் தடவி வாட்டிய நிலையிலிருந்த கால்கள் (4 எண்ணங்கள்) மற்றும் சமைத்துக் கொண்டிருந்த இறைச்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு இந்த குற்றத்தோடு தொடர்புடைய எதிரிகளான முத்துக்குமார், வயது 19, த/பெ. முனியாண்டி, ஆறுமுகசாமி வயது 59, த/பெ. சங்கரலிங்கம், பால்பாண்டி வயது 43, த/பெ. ராஜீ மற்றும் சூர்யா வயது 27, த/பெ. மகாலிங்கம் ஆகியோர் பிடிபட்டனர். பிடிபட்ட நால்வரையும் ராமநாதபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Tags :