அமலாக்கத்துறையை மொத்தமாக மூட வேண்டும் : கார்த்தி

by Staff / 02-12-2023 04:38:39pm
அமலாக்கத்துறையை மொத்தமாக மூட வேண்டும் : கார்த்தி

அமலாக்கத்துறை முழுக்க, முழுக்க ஊழல்வாதிகளால் நடத்தப்படும் துறை என்பதால் அதனை மொத்தமாக இழுத்து மூட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்றதாக, அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில், இதுகுறித்து பேசிய கார்த்தி சிதம்பரம் : அமலாக்கத்துறையில் லஞ்சம் கொடுத்துதான் பணியில் சேர்கிறார்கள், அந்த துறை செய்யும் வேலையை சிபிஐ-யில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவினரே சிறப்பாக மேற்கொள்வார்கள் என யோசனை தெரிவித்தார்.

 

Tags :

Share via
Logo