"திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு நம்பர் 1" டி.ஆர்.பி.ராஜா பேட்டி

by Staff / 17-08-2024 02:22:14pm

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக திகழ்ந்து வருகிறது என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதலீடுகளை தாண்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனில் தான் திமுக அரசு கவனம் செலுத்தி வருகிறது. 18,720 பெண்கள் தங்கும் அளவுக்கான விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இது இந்தியாவின் முதல் தொழில்துறை வீட்டு வசதி திட்டமாகும்" என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via