8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்- தமிழ்நாடு அரசு உத்தரவு

by Admin / 17-10-2023 12:32:37am
 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்- தமிழ்நாடு அரசு உத்தரவு

 வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளராக அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார்..

 உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலராக இருந்த ஜெகன்நாதன் இப்போது வணிக வரித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், வீட்டு வசதி & நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளராக சமயமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.... 

விஜிலேன்ஸ் கமிஷனராக இருக்கும் கோபால், தற்போது கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்... 

சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளராக இருக்கும் ரமேஷ்சந்த் மீனா திட்ட வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்...

அதேபோல தமிழ்நாடு காதி கிராப்ட் எம்.டி.யாக இருந்த சோபனா இப்போது அச்சு & எழுதுபொருள் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்... 

மேலும், சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் இருந்த கவிதா ராமு இப்போது தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்..இம்மாற்றல் உத்தரவை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்....

 

Tags :

Share via

More stories