சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைவதற்கு 100 சதவீதம் வாய்ப்பில்லை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, கட்சிக்குள் மீண்டும் பிரவேசிக்கவும், அதை முழுவதுமாக கைப்பற்றவும் முயன்று வருகிறார். இது தொடர்பாக அவர், தன் ஆதரவாளர்களுடன் பேசும் ஆடியோக்கள் சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் உரசல் போக்கு நிலவி வரும் நிலையில் சசிகலாவின் வருகை உறுதி என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கட்சியை நன்றாக வழி நடத்திச் செல்கிறார்கள். சசிகலா இல்லாமலேயே அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இயக்கம் எழுச்சியோடு செயல்பட்டு வருகிறது. அவரின் தேவை என்பது அதிமுகவுக்கு இல்லை.
இதற்கு முன்னரே எடப்பாடி பழனிசாமி, சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைவதற்கு 100 சதவீதம் வாய்ப்பில்லை என்றார். அதைத் தான் மாண்டும் நானும் கூறுகிறேன். எங்கள் கட்சியைப் பொறுத்தவரை ஒரேயொரு நிரந்தப் பொதுச் செயலாளர். அவர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா மட்டும் தான்' என்று தெரிவித்துள்ளார்.
Tags :