ட்விட்டர் பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி
ட்விட்டர் தளத்தில் தற்போது பயனர்களின் கணக்குகளை பிளாக் செய்யும் வசதியை விரைவில் நீக்க உள்ளதாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலன் மஸ்க் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த புதிய மாற்றம் நடைமுறைக்கு வந்தால் இனி பயனர்கள் தங்களுக்கு தொந்தரவு தரக்கூடிய கணக்குகளை பிளாக் செய்ய முடியாது. அவர்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளை மட்டுமே மியூட் செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி பயனர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ட்விட்டரின் லோகே X என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :
















.jpg)


