தென் தமிழக மாவட்டங்களில் சனிக்கிழமை மழைக்கு வாய்ப்பு.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் சனிக்கிழமை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது, மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
Tags :