பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

by Staff / 06-09-2023 02:11:31pm
பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் 9 முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நேரம் வழங்க வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில், விலைவாசி உயர்வு, வேலையின்மை, விவசாயிகளுக்கான ஆதார விலை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க கோரிக்கை வைத்துள்ளார். மேலும், அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், சீன எல்லை பிரச்சினை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo