வாட்ஸ் அப் செயலியில் அனுப்பிய குறுஞ்செய்தியை நிரந்தரமாக அழிக்க கால அவகாசம் நீட்டிப்பு

by Editor / 03-07-2022 03:30:25pm
வாட்ஸ் அப் செயலியில் அனுப்பிய குறுஞ்செய்தியை நிரந்தரமாக அழிக்க கால அவகாசம் நீட்டிப்பு

வாட்ஸ் அப் செயலியில் ஒருவருக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை இரண்டரை நாட்கள் வரை நிரந்தரமாக அழிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகில் பல மில்லியன் மக்களால் பயன்படுத்தப்படும் செயலி என்றால் அது வாட்ஸ் அப் தான். இந்த செயலில் அவ்வப்போது பல்வேறு வசதிகள் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒருவருக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியை இரண்டரை நாட்கள் வரை நிரந்தரமாக அழிக்கும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. 
ஏற்கனவே ஒருவருக்கு அனுப்பப்பட்ட செய்தியை அளிக்க வேண்டும் என்றால் அனுப்பிய ஒரு மணி நேரம் 8 நிமிடங்களுக்குள் delete for everyone  என்ற வசதியை பயன்படுத்தி அழிக்க முடியும். இந்த கால அவகாசத்தை நீட்டிக்கவும், அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் திரும்பப் பெறும் வசதியினையும் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

Tags :

Share via