புயலில் சிக்கி மூழ்கும் கப்பல்- ஊழியர்களை மீட்க போராடும் கடலோர காவல்படை27பேர் மாயம்

by Editor / 03-07-2022 03:47:36pm
புயலில் சிக்கி மூழ்கும் கப்பல்- ஊழியர்களை மீட்க போராடும் கடலோர காவல்படை27பேர் மாயம்

தென் சீனக் கடலில் இயக்கப்படும் என்ஜினீயரிங் கப்பல் ஒன்று, ஹாங்காங் அருகே புயலில் சிக்கி கவிழ்ந்துள்ளது. சுமார் 30 ஊழியர்களுடன் சென்றுகொண்டிருந்த அந்த கப்பல், ஹாங்காங்கின் தெற்கே 300 கிமீ தொலைவில் வெப்பமண்டல புயலில் சிக்கியது. இதனால் கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிக்கொண்டிருக்கிறது. தகவல் அறிந்த கடலோர காவல் படையின் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கப்பலில் சிக்கியிருந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படுகின்றனர். காற்று வேகமாக வீசுவதால் மீட்பு பணி கடும் சவாலாக இருக்கிறது. இன்று காலை வரை மூன்று நபர்கள் மட்டுமே மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடலோர காவல்படையினர் மீட்பு பணியில் ஈடுபடுவது தொடர்பான புகைப்படத்தை ஹாங்காங் அரசு வெளியிட்டுள்ளது. இரண்டு பகுதிகளாக உடைந்து மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலை கடுமையான அலை தாக்குவதும், ஒரு ஊழியர் மீட்பு ஹெலிகாப்டரில் ஏற்றுவதும் அந்த புகைப்படங்களில் உள்ளது. கப்பல் மூழ்கும் காட்சி மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

Tags :

Share via