வெயிலின் உக்கிரத்தாக்குதலிருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள்

by Admin / 01-04-2022 02:17:34am
 வெயிலின் உக்கிரத்தாக்குதலிருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள்



தமிழ் நாட்டில் வெயில் கடுமையாகத்தாக்கி வருகிறது.நான்கு மாவட்டங்களில் 104 டிகிரிக்கும் மேலாக வெயில் உக்கிரமாகி உள்ளது. இன்னும் சித்திரை மாதம் ஆரம்பிக்க வில்லை.அதற்குள் அனலின் கொடுமை அதிகரித்து ,அவஸ்தைக்கு உள்ளாகி உள்ளனர்.வீட்டுக்குள்,காற்று இல்லாமல் முதியவர்கள்,குழந்தைகள் அவஸ்தைபட்டு வருகின்றனர். இச்சூட்டிலிருந்து நம்மைக்காத்துக்கொள்ள வேண்டியது நம்கடமை. செயற்கைப்பானங்களை வாங்கி பருகி சூட்டைத்தணித்தாலும்  அதனால்,பாதிப்பு தான் உருவாகும்.இயற்கையான நம் முன்னோர்கள் பின் பற்றிய வழிமுறைகளை  நாமும் பின் பற்றினால் ஆரோக்கியத்திற்கு நல்லது. தர்பூசணி உடல் வெப்பத்தை குறைக்க ,அதிக விலையில் இல்லாமல் சாதாரணமாக கிடைக்கிறது. அதை சின்னச் சின்ன துண்டுகளாகவும் போட்டு விற்பனை செய்கின்றர். மிக்ஸியில் போட்டு அரைத்துப்பானமாகவும் கொடுக்கிறார்கள். இதிலும்இயற்கையாக பல்வேறு  சத்துக்கள் உள்ளன.
  அதிக செலவில்லாமல் கிராமங்களில் செய்யப்பெறும் பானம்.கருப்பட்டி பானம்.கருப்பட்டி நூறு கிராம் அளவில்
எடுத்து நன்றாக உடைத்து தூளாக்கி 25கிராம் புளியை எடுத்து நன்றாக காரத்து அதனுடன் கொஞ்சம் ஏலக்காய்தூளாக்ககருப்பட்டி புளிகரைசவலாடு கலந்கது சாஞ்சம் குளிர்ச்சியாக்கி பருகினால் உடல் சூடு பறந்து போகும் கருப்பட்டி பனத்தின் சுவை நம் நாக்கில் சுவையாகீ நிற்கும். இளநீர் பானம்;இளநீர் வெயில் காலத்தில் பருகப்படும் முதன்மையான இயற்கை பானம்.இளநீர் வெறும் குளிர்ச்சியைத்தரும் என்று தான் நாம் நினைத்திருப்போம்.ஆனால்,அதிலிருக்கும் மினரல்கள் என்னென்ன என்பதை அறிந்தால் இளநீர் பருகாமலிருக்க மாட்டோம்.இளநீரில் ,நார்ச்சத்து,பாஸ்பரஸ்,இரும்புச்சத்து,மாங்கனீசு,செம்பு,பொட்டாசியம்,
சோடியம்,செலினியம்,மெக்னீசியம் முதலிய முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.வெயில் காலத்தில் இளநீர் குடிப்பது மூலம் தோல் நோய் ,வியர்க்குறு,பருக்கல் போன்றவற்றை அகற்றுவதோடு,சிறு நீரக கல் உருவாகாமலும்தடுக்கும்.

 

Tags :

Share via