ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 அதிகரிப்பு.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 அதிகரித்துள்ளது, இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இன்று முகூர்த்த நாள் என்பதால், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 960 உயர்ந்து, ரூ. 46,560க்கும் கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.5,820க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளி ரூ.2.50 உயர்ந்து ரூ.79.50க்கும், கிலோ வெள்ளி ரூ.2500 உயர்ந்து ரூ.79,500க்கும் விற்பனையாகிறது. கடந்து சில நாட்களாக குறைந்து வந்த விலை இன்று நாளில் பலமடங்கு உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்சியடைந்துள்ளனர்.
Tags : ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.960 அதிகரிப்பு.