50 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்

by Staff / 05-11-2023 03:28:10pm
50 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்

ஹரியானாவில் அரசு பள்ளியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவியரிடம், பள்ளி முதல்வர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகர் அருகே ஜிந்த் மாவட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் இதுதொடர்பாக மாநில மகளிர் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளார்கள். பள்ளி முதல்வர், பள்ளி அலுவலகத்தின் கதவை, மறுபக்கம் இருந்து பார்க்கும்போது எதுவும் தெரியாதபடிக்கு மாற்றி இருக்கிறார் என்று போலீசார் தெரிவித்தனர். பள்ளி முதல்வரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளார்.

 

Tags :

Share via
Logo