காவல்துறையின் கையை கட்டும் திமுக - அண்ணாமலை

by Staff / 05-11-2023 03:17:49pm
காவல்துறையின் கையை கட்டும் திமுக - அண்ணாமலை

பாஜகவினர் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதற்கு காவல்துறையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசை விமர்சனம் செய்துள்ளார். என் மண் என் மக்கள் யாத்திரையில் இருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று கரூரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வழிப்பறியை, பெண்கள் மீது கை வைப்பவர்களை வேடிக்கை பார்க்கும் காவல்துறையினர் கொடி கம்பம் வைத்ததற்காக பாஜகவினரை கைது செய்கின்றனர். பாம்பிற்கு பல்லை பிடுங்குவதைப் போல, காவல்துறையின் கையை கட்டுவது திமுகவின் கைவந்த கலை” என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

 

Tags :

Share via

More stories