பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு ரூ.49 லட்சம் இழப்பு -2பேர் கைது

சென்னை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் செயல்படும் தனியார் நெட்வொர்க் நிறுவனமும், பாரிமுனையில் செயல்படும் மற்றொரு நிறுவனமும் 34 டெலிபோன் இணைப்புகளை பெற்று, டெலிபோன் பில் கட்டாததால் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ. 49 லட்சம் இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சார்பில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் 2003-ல் புகார் அளிக்கப்பட்டது. காவல் ஆணையர் உத்தரவுப்படி, 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவரையும், சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே இருந்தபோது போலீஸார் கைது செய்தனர்.
Tags :