கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

by Admin / 11-02-2022 10:34:18am
கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

 
இலங்கைக்கு கடத்துவதற்காக மதுரையில் இருந்து பேருந்து மூலம் ஒரு கோடி  ரூபாய் மதிப்பிலான ஒன்றை  கிலோ அளவுள்ள கொக்கையின் போதை பவுடரை ராமேஸ்வரத்துக்கு கொண்டு வருவதாக தீவிர குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து விரைந்து சென்ற மாவட்ட தீவிர குற்றப்பிரிவு போலீசார் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் ஐந்து நபர்களை பிடித்து  விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாண தகவல்களை தெரிவித்தையடுத்து ராமேஸ்வரம் நகர்  காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தியதில் ஒன்றரை கிலோ கொக்கையின் போதை பவுடர் கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போதை பவுடரை  பறிமுதல் செய்து 5 பேரை பிடித்து ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு இருக்கும் பொழுது தகவல் அறிந்து விரைந்து வந்த   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தி நகர் காவல் நிலையத்தில் வைத்து குற்றவாளிகளிடம்  தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். 

மேலும் பிடிபட்ட 5 நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கொக்கையின் போதை பவுடரை சென்னையில் உள்ள  தடய அறிவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
 
மேலும் கைது செய்யப்பட்ட ஐந்து நபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒன்றை  கிலோ கொக் கையின்  போதைப் பவுடரின் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோக்கைன் போதைப் பொருள் சம்பந்தமாக ஐந்து நபர்களுடன் தொடர்புடைய வேறு யாரேனும் பெரிய நபர்கள் இந்தக் குற்றத்தின் பின்னணியில் உள்ளனரா என்பது குறித்து தற்போது ராமேஸ்வரத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories