தமிழ்நாட்டுச் சேர்ந்த 21 பேர் அமர்நாத் யாத்திரைக்கு சென்ற நிலையில் நிலச்சரிவில் சிக்கி தவிப்பு.

by Admin / 12-07-2023 01:21:12am
தமிழ்நாட்டுச் சேர்ந்த 21 பேர் அமர்நாத் யாத்திரைக்கு சென்ற நிலையில் நிலச்சரிவில் சிக்கி தவிப்பு. சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த சங்கர் (77) என்பவரின் ஏற்பாட்டின் பேரில் 21 பேர் கொண்ட குழுவினர் கடந்த ஜூலை 4ம் தேதி புறப்பட்டு 7ம் தேதி அமர்நாத் கோவில் சென்ற நிலையில், 7ம் தேதி புறப்பட்டு அமர்நாத் கோவிலில் இருந்து நடந்து பால்டால் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து ஸ்ரீநகருக்கு செல்ல விருந்த நிலையில் ஸ்ரீநகர் காஷ்மீர் சாலை நிலச்சரிவில் முழுவதும் துண்டிக்கப்பட்டு விட்டதாக கூறி வீரர்கள் 21 பேரையும் அங்கு மலை மீது உள்ள தற்காலிக முகாமிற்கு சென்று தங்க வைத்துள்ளனர்.உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் எதுவும் இன்றி தவித்து வருவதாக 21 பேர் தகவல். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி, செல்வி தம்பதிகள், மற்றும் சின்னமனூரைச் சேர்ந்த செந்தில்குமார், ராஜாங்கம் உள்ளிட்ட நான்கு பேரும் இதில் சிக்கியுள்ளனர். தமிழ்நாட்டுச் சேர்ந்த 21 பேர் அமர்நாத் யாத்திரைக்கு சென்ற நிலையில் நிலச்சரிவில் சிக்கி தவிப்பு.
 

Tags :

Share via

More stories