பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே குளத்தூர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் மணிகண்டன். (வயது 30). கூலித் தொழிலாளி. 9ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்த 16 வயது பள்ளி மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வேடசந்தூர் டி. எஸ். பி. துர்கா தேவி உத்தரவின் படி வடமதுரை மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை செய்ததில் மாணவிக்கு மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் பதுங்கியிருந்த மணிகண்டனை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
Tags :