புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரி கைது

by Staff / 25-09-2023 02:31:54pm
புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரி கைது

பழனி ஒபுளாபுரம் பகுதியில் உள்ள மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக ஆயக்குடி போலீசாருக்கு தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அதேபகுதியை சேர்ந்த அங்குராஜ் (47) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தனது மளிகை கடையில் பதுக்கி வைத்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவரை கைது செய்து கடையில் 1 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்செய்தனர். கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்

 

Tags :

Share via