மின்வேலி அமைத்தால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்அதிகாரி எச்சரிக்கை.

நெல்லை மாநகர மின் கோட்ட செயற்பொறியாளர் குருசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:விளை நிலங்களில் காட்டுவிலங்குகளினால் ஏற்படும் பாதிப்பை சரிசெய்ய விலங்குகளிடமிருந்து விளைபொருட்களை பாதுகாத்திட விவசாயிகள் தங்களது நிலங்களில் மின் வேலி அமைப்பதை நிலத்தின் உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் விலங்குகள் விளை நிலங்களை சேதப்படுத்திவிடுவதை தவிர்க்க அமைக்கப்படும் மின் வேலிகளால் பல நேரங்களில் பல மனித உயிர்கள் பலியாவதை தவிர்த்திட மின் வேலிகள் அமைக்க கூடாது எனவும், மீறி வேலி அமைத்தால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags :