ரயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும் - அமைச்சர்

பொதுமக்களை பாதிக்காத வகையில் ரயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும் என ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா தெரிவித்துள்ளார். ரயில் கட்டணம் ஜூலை 1 முதல் உயர்த்தப்படும் என செய்தி வெளியான நிலையில், தமிழக முதல்வர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று காஞ்சிபுரத்தில் புதிய ரயில் நிலையத்தை ஆய்வு செய்தபின் பேசிய சோமண்ணா, கட்டணம் உயர்த்துவது குறித்தான முடிவை தெரிவித்துள்ளார். இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :