கள்ளக்குறிச்சி விவகாரம் - 11 பேருக்கு 2 நாள் காவல்
கள்ளக்குறிச்சி மாவட்ட கள்ளச்சாராய வழக்கில் 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்த 6 நாட்கள் காவல் கேட்டு சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்று நடந்த விசாரணையில், கண்ணுக்குட்டி, சின்னதுரை, கதிரவன், கண்ணன் உள்ளிட்ட 11 பேரை 2 நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மொத்தம் 21 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
Tags :