புதிய கல்விக்கொள்கையின் படி, +1 பொதுத்தேர்வு ரத்து.
நடப்பு கல்வி ஆண்டு முதல் மாநிலத்தின் புதிய கல்விக்கொள்கையின் படி, +1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தற்போது அமலில் உள்ள +1 பொதுத்தேர்வு முறை இந்த ஆண்டு முதலே ரத்தாகிறது. 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் அமலில் இருக்கும். 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் முறை தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியான அழுத்தத்தில் இருந்து மாணவர்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.
Tags : புதிய கல்விக்கொள்கையின் படி, +1 பொதுத்தேர்வு ரத்து



















