4 வது மாடியிலிருந்து கீழே விழுந்த பெயிண்டர் பலி

by Staff / 14-10-2023 01:17:59pm
4 வது மாடியிலிருந்து கீழே விழுந்த பெயிண்டர் பலி

மதுரையில் 4வது மாடியிலிருந்து கீழே விழுந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட மதிச்சியம் நடுத்தெருவை சேர்ந்த மாரிமுத்து (45) என்பவர் பெயிண்டராக உள்ளார். இவர் கட்டிடங்களில் ஒப்பந்தம் முறையில் வேலை பார்த்து வந்தார். இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனை ஒன்றில் ஒப்பந்தம் எடுத்து 4 வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கால்தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
 

 

Tags :

Share via

More stories